ஒரே வாரத்தில் 2வது பாஜ தலைவர் கதை முடிப்பு: பீகாரில் கடும் அதிர்ச்சி BJP Leader Shot Dead Patna
பீகார் தலைநகர் பாட்னாவில் சரியாக ஒரு வாரத்துக்கு முன் அம்மாநிலத்தின் பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா அவரது வீட்டு முன் நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி துப்பாக்கியுடன் பைக்கில் தப்பிச் செல்லும் வீடியோ மாநிலத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. கோபால் கெம்கா ஒரு பாஜ பிரமுகர் என்பதால், ஆளும்கட்சியினருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாஜ, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசை சாடின. அந்தபரபரப்பு அடங்குவதற்குள் தலைநகர் பாட்னாவில் இன்னொரு பாஜ தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாட்னாவின் புறநகர் பகுதியில் உள்ள ேஷக்புரா Sheikhpura பகுதியைச் சேர்ந்தவர் Surendra Kewat சுரேந்திரா கெவாத். வயது 52.