உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை Bomb Threat for Bombay

டில்லி, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை Bomb Threat for Bombay

டில்லி ஐகோர்ட்டில் இன்று காலை வழக்கம் போல் வழக்கு விசாரணை துவங்கியது. நீதிபதிகள், ஏராளமான வக்கீல்கள், வாத, பிரதிவாதிகள் என அனைவரும் கூடியிருந்தனர். காலை 11.30க்கு டில்லி ஐகோர்ட் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிக்கு,வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்தது. ஐகோர்ட் வளாகத்தில் 3 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தத. இது குறித்த தகவல் அறிந்ததும், வழக்கு விசாரணையை பாதியில் நிறுத்திய நீதிபதிகள் விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினர். போலீஸ் அறிவுரைப்படி, வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் உட்பட வளாகத்தில் இருந்த அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர். மோப்ப நாய்களுடன் கோர்ட்டுக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் கோர்ட் வளாகத்தில் சோதனையை துவங்கினர். ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் அடுத்தடுத்து வந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சில மணி நேரங்கள் சோதனை தொடர்ந்தது. எனினும், கோர்ட் வளாகத்தின் எந்த பகுதியிலும் வெடிகுண்டோ, சந்தேகத்திற்கு இடமான பொருட்களோ கிடைக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு வைத்திருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என போலீசார் கூறினர். மிரட்டல் விடுக்கப்பட்ட இமெயில் முகவரி குறித்து, டில்லி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து, டில்லி போலீஸ் டிசிபி தேவேஸ் குமார் கூறுகையில், அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி முடித்தாகிவிட்டது. எங்கும் வெடிகுண்டு கிடைக்கவில்லை. மிரட்டல் விடுக்கப்பட்ட இமெயிலையும் செக் செய்தோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றார். டில்லியில் சோதனை நடந்த அதே நேரத்தில் மும்பை ஐகோர்ட்டுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும், வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த தலைமை நீதிபதி சந்திரசேகர் உட்பட அனைத்து நீதிபதிகளும் உடனே வெளியேறினர். தொடர்ந்து வக்கீல்கள், ஊழியர்கள் மற்றும் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தோர் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அங்கும் வெடிகுண்டை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், மும்பை ஐகோர்ட்டிலும் எவ்வித வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து சில மணி நேரங்கள் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது. டில்லி, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். #BombThreat| #DelhiMumbaiHighcourt| #HighCourtBombThreat| #BombayHighCourt| #DelhiHighCourt

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை