உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவெக தலைவர் வீட்டில் முதல்வர் கான்வாய்: போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை Vijay|CMConvoy|electionResults

தவெக தலைவர் வீட்டில் முதல்வர் கான்வாய்: போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை Vijay|CMConvoy|electionResults

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் பலம் தேவை என்ற நிலையில் நாளை தவெக தலைவர் விஜய், கட்சி நிர்வாககிகள், புதிதாக தேர்வான எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில், இன்று மதியமே விஜயின் நீலாங்கரை வீட்டிற்கு சென்ற போலீஸ் உயர் அதிகாரிகள், அவரை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசினர். விரைவில் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுவதால் முதல்வருக்கு வழங்கப்படும் சிறப்பு கான்வாய் வாகனங்களுடன் விஜயின் நீலாங்கரை வீட்டில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.

மே 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி