/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணன்-தம்பிக்கு சோகம்: கிராமத்தினர் கையில் சிக்கி மரணம் brothers dies |Sivagangai | crime
அண்ணன்-தம்பிக்கு சோகம்: கிராமத்தினர் கையில் சிக்கி மரணம் brothers dies |Sivagangai | crime
சிவகங்கை மாவட்டம் அழகாமாநகரி கிராமத்தின் எல்லையோரத்தில் ஆடு, கோழி பண்ணை உள்ளது. சுப்பு என்பவர் இந்த பண்ணையை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 2 மணியளவில் 2 ஆசாமிகள் பண்ணையில் புகுந்து ஆடு, கோழிகளை திருட முயன்றனர். கோழிகள் சத்தமிட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். பிறகு ஊர்மக்கள் திரண்டு வந்து ஆடு, கோழிகளை திருட முயன்ற இரு ஆசாமிகளையும் பிடித்து கண்மூடித்தனமாக தாக்கினர். இதுகுறித்து மதகுபட்டி போலீசாருக்கு தகவல் போகவே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ஜூன் 03, 2025