ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க மக்கள் கோரிக்கை
சென்னையில் தொடர்மழை பெய்து வருவதால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி, சென்னை மாநகராட்சியின் 7 வது வார்டில், பக்கிங்காம் கால்வாயில் மர்ம நபர்கள் ஆயில் கழிவை கலந்து விட்டுள்ளனர். பக்கிங்காம் கால்வாயில் கலக்கப்படும் ஆயில் கழிவுகள் எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கால்வாயில் ஆயில் கழிவை கலந்துவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
டிச 13, 2024