பட்ஜெட் எதிர்பார்ப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்! Budget Expectations | CM Stalin | Nirmala | Finan
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாளை மறுநாள், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் குறித்து நிர்மலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும். தாம்பரம் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டும். பத்து ஆண்டுகளாக வருமான வரி சுமை குறைக்கப்படும் என நடுத்தர குடும்பங்கள் எதிர்பார்த்து இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதிய ரயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்திட போதிய நிதி ஒதுக்க வேண்டும்.