/ தினமலர் டிவி
/ பொது
/ புல்லட் யானை அட்டகாசம்; பந்தலூரில் மக்கள் பீதி | Bullet Elephant | Houses damaged | Pandalur
புல்லட் யானை அட்டகாசம்; பந்தலூரில் மக்கள் பீதி | Bullet Elephant | Houses damaged | Pandalur
வீட்டில் புகுந்த புல்லட் யானை பாட்டி, பேத்தி பிழைத்த அதிசயம் இளம்பெண் திக் திக் அனுபவம் நீலகிரி மாவட்டம் பந்தலுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புல்லட் என்ற காட்டு யானை கடந்த ஓராண்டாக வலம் வருகிறது. இரவில் உணவு தேடி கிராமங்களுக்கு உலா வரும் யானை வீடுகள், பள்ளி சத்துணவுக் கூடங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று இரவு படைச்சேரி கிராமத்திற்குள் புகுந்த புல்லட் யானை ஜானகி என்பவரின் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. வீட்டில் இருந்த அரிசி மற்றும் மைதா மூட்டையை இழுத்து சாப்பிட்டது. வேறு ஏதேனும் சாப்பிட கிடைக்கிறதா என தேடியது.
டிச 17, 2024