எங்கிருந்து எவ்வளவு அதிகம்? புட்டு வைக்கும் பயணிகள் | Bus Ticket | Govt Bus
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் மதுரை மண்டலம் சார்பில் 32 பஸ்கள், திருநெல்வேலி மண்டலம் சார்பில் 60 பஸ்கள், கோவை மண்டலம் சார்பில் 9 பஸ்கள் தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் மறு மார்க்கமாக இதே வழித்தடத்தில் திருச்செந்தூரில் இருந்து மேலக்கரந்தை, அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடி, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்கின்றனர். திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு 172 ரூபாய் டிக்கெட் கட்டணமும், தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு 133 ரூபாய் டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
பிப் 28, 2025