/ தினமலர் டிவி
/ பொது
/ வெளிநாட்டு மாணவர்களின் 40 சதவீத கல்வி விசா விண்ணப்பத்தை நிராகரித்தது கனடா Canada Government rejects
வெளிநாட்டு மாணவர்களின் 40 சதவீத கல்வி விசா விண்ணப்பத்தை நிராகரித்தது கனடா Canada Government rejects
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உயர் கல்விக்காக, கனடா செல்வது வழக்கத்தில் இருந்து வந்தது. கல்வித் தரம், வேலை வாய்ப்பு, ஊக்கத் தொகை, குறைந்த செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாணவர்களின் முதன்மை தேர்வாக கனடா இருந்து வந்தது. நாளடைவில் கனடாவில் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதற்கு ஏற்றார் போல், வீடுகள் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு இல்லாததால், தங்கள் நாட்டில் வெளிநாட்டு மாணவர்களை அதிகம் அளவில் அனுமதிப்பதற்கு அந்நாட்டு அரசு தயக்கம் காட்ட துவங்கி உள்ளது.
நவ 04, 2025