கோவை சரகத்தின் புது டிஐஜி உறுதி
கோவை சரக டிஐஜி ஆக இருந்த சரவண சுந்தர், பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை எஸ்பி ஆக இருந்த சசி மோகன் டிஐஜி ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் அலுவலகத்தில் இன்று அவர் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்
ஜன 01, 2025