இப்போ மிஸ் பண்ணா இனி 2028ல் தான்! | Lunar Eclipse | Chandra Grahan 2025 |
நாளை இரவு முழு சந்திர கிரஹணம் நிகழ உள்ளது. இது நாடு முழுதும் தெரியும். இந்த சந்திர கிரஹணம் 85 நிமிடங்கள் நீடிக்கும். இரவு 8:58க்கு சந்திரன் முதலில் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். இதை நம் கண்களால் பார்ப்பது கடினமாக இருக்கும். பின் 9:57க்கு கிரஹணமாக துவங்கும். அப்போது, சந்திரன் இருண்ட கருநிழல் பகுதிக்குள் நுழையும். அந்த கிரஹணத்தை எளிதாக காணலாம். இரவு 11:01 முதல் நள்ளிரவு 12:33 வரை, சந்திரன் முழுமையாக மறையும். 1.26 மணிக்கு சந்திரன் கருநிழல் பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறும். அதிகாலை 2.25க்கு புறநிழல் பகுதியை விட்டு வெளியேறும். இந்த கிரஹணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் . சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில், சந்திர கிரஹணத்தை தொலைநோக்கி வழியாக பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு 9 மணி முதல் கிரஹணம் விடும் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த கிரஹணம், ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, தென்அமெரிக்காவின் கிழக்கு பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல், ஆர்க்டிக், அண்டார்டிகா பகுதிகளில் தெரியும். அடுத்த சந்திர கிரஹணம் 2028 டிசம்பர் 31ல் நிகழ உள்ளது. வரும் 21, 22ம் தேதிகளில் நிகழவுள்ள சூரிய கிரஹணம் இந்தியாவில் தெரியாது. தெற்கு ஆஸ்திரேலியா, பசிபிக் தெற்கு பகுதிகள், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் தெரியும் என சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சண்முகசுந்தரம் கூறி உள்ளார். #LunarEclipse | #ChandraGrahan2025 | #Moon