சந்திரபாபு நாயுடு புகார் உண்மையானது! Tirupati Temple | Laddu Prasatham | Lab Report
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். ஜெகன் மோகன் முதல்வராக இருந்த காலத்தில் நெய் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகவும் அவர் புகார் கூறினார். இந்நிலையில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் நெய்யில் 37 சதவீத கொழுப்பு கலக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது. நெய்யில் சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ், ராப்சீட், ஆளி விதை, பருத்தி விதை, மீன் எண்ணெய், பாமாயில், மாட்டு கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெகன் ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்ட அந்த நிறுவனம் தற்போது பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் செலுத்திய முன் வைப்பு தொகையும் திரும்பி தர முடியாது என திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர உள்ளதாகவும், தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளாராவ் கூறி உள்ளார்.