உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜம்மு காஷ்மீர் செனாப் பாலம் பற்றி தகவல் திரட்டும் சீனா, பாகிஸ்தான் | Chenab rail bridge | Jammu kas

ஜம்மு காஷ்மீர் செனாப் பாலம் பற்றி தகவல் திரட்டும் சீனா, பாகிஸ்தான் | Chenab rail bridge | Jammu kas

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் மீது 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள கவுரி கிராமத்திற்கு அருகில் இருக்கும் சலால் அணையின் இரு மலை முகடுகளுக்கு இடையே பிரமாண்டமான கட்டமைப்புடன் செனாப் பாலம் உருவாகி உள்ளது. 1.3 கிலோ மீட்டர் நீளம், 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், உலக அதியசங்களில் ஒன்றான பிரான்ஸ் ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமானது. இப்போது உலகின் மிக உயரமான பாலமாக இருப்பது சீனாவின் குய்சோ மாகாணத்தில் 275 மீட்டர் உயரத்தில் இருக்கும் பெய்பன்ஜியாங் மேம்பாலம். செனாப் ரயில்வே பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமையை பெற உள்ளது. இந்த ரயில் பாலத்தின் மீது, சங்கல்தான் - ரியாசி இடையே மத்திய அரசு சமீபத்தில் ரயில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை