சென்னையில் செய்தி சேனல் ஊழியருக்கு நடந்த சோகம்! | Chennai | Rapido Driver | Tambaram bypass road
சென்னை பாண்டி பஜார், கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பிரதீப் குமார் வயது 39. பிரபல தெலுங்கு செய்தி சேனலில் ஒளிப்பதிவாளர். இது தவிர பகுதி நேர ரேபிடோ டிரைவராகவும் இருந்துள்ளார். நேற்று நள்ளிரவு தாம்பரம் பைபாஸ் சாலையில் பிரதீப் சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் அடுத்த ஓடமா நகர் அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார், இவரது பைக் மீது மோதி உள்ளது. பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரதீப் குமார் மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள சர்வீஸ் சாலையில் விழுந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த பிரதீப் ஸ்பாட்டிலேயே பரிதாபமாக இறந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய அந்த கார் டிரைவர் நிற்காமல் அங்கிருந்து சென்றுள்ளார். விபத்து காரணமாக ஏற்பட்ட கோளாறால் 1 கிமீ தொலைவில் அந்த கார் தானாகவே நின்றுள்ளது. விபத்து ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். ஸ்பாட்டுக்கு வந்த கோயம்பேடு போலீசார் பிரதீப் குமார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த காரை பறிமுதல் செய்து விசாரித்தனர்.