சர்வதேச போதை கடத்தல் கும்பல் தந்த அசைன்மென்ட்
எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளை பரிசோதித்தனர். நைஜீரியாவை சேர்ந்த பிரடிலின் என்ற பெண், டிராவல் பேக் அடியில் ரகசிய அறையில் 1 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்தது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு 10 கோடி ரூபாய். அவரை கைது செய்து போதை பொருளை பறிமுதல் செய்தனர். சுற்றுலா விசாவில் சென்னை வந்துள்ள பிரடிலினுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஒவ்வொரு முறை போதைப்பொருள் கடத்தின்போதும் கணிசமான தொகையை கமிஷனாக பெற்று வந்துள்ளார்.
ஜூலை 08, 2024