உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு அரசாணை வெளியீடு | TNGovt | Chennai Corporation | food for sanitatio

தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு அரசாணை வெளியீடு | TNGovt | Chennai Corporation | food for sanitatio

தனியார் மயமாக்கலை கண்டித்து 2 மாதங்களுக்கு முன் சென்னையில் தூய்மை பணியாளர்களின் மாபெரும் போராட்டம் வெடித்தது. பல மாவட்டங்களில் துாய்மை பணியாளர்கள், அரசை கண்டித்து போராட்டங்களில் இறங்கினர். இது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, இலவச உணவு வழங்கப்படும். முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகஸ்ட் 4ம் தேதி அறிவித்தார். அதை செயல்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நகராட்சி நிர்வாக செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னை மாநகராட்சியில் உள்ள 29,455 துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. காலை உணவு 5:30 முதல் 6:00 மணி வரை 5,159 பேருக்கு 166 இடங்களில் வழங்கப்படும். மதிய உணவு 1:30 முதல் 2:00 மணி வரை 22,886 பேருக்கு 285 இடங்களில்; இரவு உணவு 9:30 முதல் 10:00 மணி வரை 1,410 பேருக்கு 61 இடங்களில் வழங்கப்பட உள்ளது. டிபன் கேரியர் மூலம் உணவு வினியோகம் செய்யப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு 3 வேளை உணவு வழங்க 186 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு வழங்கும் திட்டத்தை கண்காணிக்க ஒரு திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமனம் செய்யப்பட உள்ளார். ஒரு துாய்மை பணியாளரின் காலை உணவுக்கு 47 ரூபாய், மதிய உணவுக்கு 57, இரவு உணவுக்கு 42 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். மற்ற நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் இத்திட்டத்தை துவக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #TNGovt | #ChennaiCorporation | #sanitationworkers | #freemeals

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை