கள்ளச்சாராய வழக்கில் கேள்வி கேட்ட ஐகோர்ட்
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூனில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 67 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 18 மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதியப்பட்டது. குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி 18 பேரும் ஐகோர்ட்டில் முறையிட்டனர். நீதிபதிகள் எஸ்எம் சுப்ரமணியம், எம் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அரசு வக்கீல் ராமன் வாதிடும்போது, அனைவரிடம் வழக்கிலும் பதில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டார்.
டிச 18, 2024