உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விளக்கம் அளித்து திட்டத்தை தொடர்வோம்! | Chennai Metro | metro rail |Coimbatore Madurai Metro

விளக்கம் அளித்து திட்டத்தை தொடர்வோம்! | Chennai Metro | metro rail |Coimbatore Madurai Metro

சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம் டு ஒத்தக்கடை இடையே 32 கி.மீ., துாரத்திற்கும், கோவையில் அவிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரை; உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை 39 கி.மீ. துாரத்திற்கும் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. 2 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை 10 மாதங்களுக்கு முன் தமிழக அரசு அனுப்பியது. 2 திட்டங்களின் அறிக்கையை மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. 2017 விதிகளின்படி மக்கள் தொகை 20 லட்சத்திற்கு மேலுள்ள நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் தான் என தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் மத்திய அரசு நிராகரித்ததாக வெளியான தகவலை சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது.

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை