சென்னை பள்ளியில் வாயு கசிவா? தீவிர விசாரணை chennai thiruvottiyur private school girl students suffer
சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கட்டடத்தின் 3வது தளத்தில் 8 மற்றும் 10ம் வகுப்புகள் உள்ளன. இன்று காலை பள்ளி துவங்கியதில் இருந்து 3வது தளத்தில் உள்ள வகுப்புகளில் ஏதோ பேட் ஸ்மெல் bad smell அடித்துள்ளது. சிலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் கூறியபோது, ஒன்றுமில்லை சரியாகி விடும் என கூறியதாக கூறப்படுகிறது. பிற்பகலில் சில மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அதன்பிறகே ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட 45 மாணவிகள் திருவொற்றியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவலறிந்ததும் பெற்றோர் பதறியடித்து ஓடிவந்தனர். அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.