உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடையாளம் தெரியாமல் உடன் இருந்தவரையும் முடித்த கும்பல்

அடையாளம் தெரியாமல் உடன் இருந்தவரையும் முடித்த கும்பல்

சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி அருண். வயது 25. இவரது நண்பர் படப்பை சுரேஷ். இவர்கள் இருவரும் மது போதையில், கோட்டூரபுரம் நாகவல்லி அம்மன் கோயில் முன் படுத்து இருந்தனர். இரவு நேரத்தில் பைக்கில் வந்த 8 பேர் கும்பல், அருண், சுரேஷ் இருவரையும் அரிவாள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியது. படப்பை சுரேஷ் ஸ்பாட்டிலேயே இறந்தார். படுகாயமடைந்த அருண், ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். கோட்டூர்புரம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மை தெரியவந்தது. வெட்டப்பட்ட அருணின் காதலி சாயின்ஷாவை 3 ஆண்டுகளுக்கு முன் ரவுடி சுரேஷ் கொலை செய்தார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் ரவுடி சுரேஷை போட்டுத்தள்ள அருண் திட்டமிட்டு வந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட ரவுடி சுரேஷ், முந்திக்கொண்டு அருணையும் அவரது அண்ணன் அர்ஜுனனையும் தீர்த்துக்கட்ட ஆட்களுடன் வந்துள்ளார். இரவில் மது போதையில் படுத்திருந்த அருணை வெட்டியுள்ளனர். பக்கத்தில் படுத்துகிடந்தது அவரது அண்ணன் அர்ஜுனன் என நினைத்த கும்பல், அடையாளம் தெரியாமல், அருணின் நண்பன் படப்பை சுரேஷை வெட்டி சாய்த்துள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கோட்டூர்புரத்தில் நடந்த இந்த இரட்டை கொலை முயற்சி சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை