சென்னை எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட அதிர்ச்சி New Jalpaiguri-Chennai Express accident | balasore accident
மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. சனிக்கிழமை வழக்கம் போல் புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ், ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தின் சோரா ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. இன்ஜின் மற்றும் முன்னாள் இருந்த சில பெட்டிகள் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து தடம் புரண்டன. தண்டவாளத்தை விட்டு அப்படியே சாய்ந்து நின்றன. மின் கம்பத்தில் ரயில் இன்ஜின் மோதி இந்த விபத்து நேர்ந்தது. அதிர்ஷ்டவசமாக பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டது. இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியது: விபத்து நடந்த ரயில்வே தடத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. பணியை சரியாக முடிக்காததால் ஒரு மின் கம்பம் தண்டவாளத்துக்கு உள் பக்கம் சாய்ந்து நின்றிருக்கிறது. எதிர்பாராத விதமாக சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் அதில் மோதியதால் தடம் புரண்டு இருக்கிறது. தடம் புரண்ட வேகத்தில் இன்ஜின் பேட்டரி கழன்று விழுந்தது. அதிர்ஷ்வசமாக பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர். ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயிலை சரி செய்தனர். சில மிணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி ரயில் புறப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு தான் ஒடிசாவின் திதிலாகர் யார்டில் ராய்ப்பூர் புறப்பட்ட சரக்கு ரயில் தடம் புரண்டது. மறுநாளே இப்போது இன்னொரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு இருக்கிறது.