கன்டெய்னர் லாரியை நடுரோட்டில் நிறுத்தியதால் டிராபிக் ஜாம் | Container lorry | U Turn issue | Traffi
திருநெல்வேலியை சேர்ந்த 35 வயது சுடலை என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். தற்போது கன்டெய்னர் லாரி டிரைவராக வேலை செய்கிறார். இன்று லோடு இல்லாத கன்டெய்னரை எர்ணாவூரில் இருந்து எல்லையம்மன் கோயில் பீச் ரோடு சாலை வழியாக சான்கோ சிஎப்எஸ் பகுதிக்கு ஓட்டி சென்றார். அப்போது எல்லையம்மன் கோவில் பகுதியில் யூடரன் அடித்ததால், அங்கு பணியில் இருந்த டிராபிக் போலீஸ் எஸ்ஐ, சுடலையை கண்டித்துள்ளார். அதற்கு சுடலை எதிர்ப்பு தெரிவிக்கவே டென்ஷனான எஸ்ஐ, லாரியில் ஏறி சுடலை முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. உதடு கிழிந்து ரத்தம் வந்ததால் ஆத்திரமடைந்த டிரைவர் சுடலை கன்டெய்னர் லாரியை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு சக டிரைவர்களுக்கு தகவல் கொடுத்தார். அனைவரும் ஒன்று திரண்ட நிலையில், வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து ஸ்தம்பித்ததால் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் பேசினார்.