உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நக்சல்கள் சுட்டதில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம்! Chhattisgarh | Naxal Encounter | 31 ki

நக்சல்கள் சுட்டதில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம்! Chhattisgarh | Naxal Encounter | 31 ki

சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூர் மாவட்டத்தில் ஜனவரி 31ம் தேதி பாதுகாப்பு படையினருக்கும் நக்சல் கும்பலுக்கும் இடையே சண்டை நடந்தது. கங்காலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டு பகுதியில் நடந்த சண்டையில் 8 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் நக்சல்களைத் தேடும் பணி நடந்தது. பீஜப்பூர் மாவட்டத்தின் தேசிய பூங்கா பகுதிக்கு கீழ் உள்ள காடுகளில் நக்சல்கள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். பாதுகாப்பு படை வருவதை அறிந்த நக்சல்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த துவங்கினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மொத்தம் 31 நக்சல்கள் கொல்லப்பட்டதாக பஸ்தர் பகுதி ஐ.ஜி. சுந்தர்ராஜ் தகவல் தெரிவித்தார். இந்த சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் நக்சல்களால் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் காயமுற்றதாகவும் அவர் கூறினார். 2026ம் ஆண்டுக்குள் சத்தீஸ்கரில் நக்சல்கள் முழுவதும் ஒழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார். அதை செய்து முடிக்கும் பணியில் சத்தீஸ்கர் மாநில போலீசார் தொடர் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை