குழந்தை திருமணத்தை மறைக்க நடந்த கோல்மால் | Child Marriage Act | RCHID
கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது பெட்டமுகிலாளம் மலை கிராமம். இங்கு 16 வயதான இரண்டு சிறுமிகள் குழந்தை திருமணம் மூலம் கர்ப்பம் ஆனார்கள். சிகிச்சை எடுக்க ஆஸ்பிடல் சென்ற போது அங்கே ஆதார் அட்டை கேட்கப்பட்டது. அதை காட்டினால் சிறுமிகள் வயது வெளியில் தெரிந்துவிடும் என உறவினர் அஞ்சினர். இப்போது எடுத்து வரவில்லை அடுத்த முறை வரும்போது தருகிறோம் என கூறினர். இதையடுத்து ஆதார் கார்டில் சிறுமிகளின் பிறந்த வருடத்தை போலியாக மாற்ற முடிவு செய்தனர். தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்டுடியோ வைத்திருக்கும் ஜலால் உல்லாவை அணுகினர்.
ஜூன் 23, 2025