/ தினமலர் டிவி
/ பொது
/ சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில் நிகழ்ந்த பெரும் சோகம் Chinnur | Kodaikanal | Dindigul dt |
சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில் நிகழ்ந்த பெரும் சோகம் Chinnur | Kodaikanal | Dindigul dt |
திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னூர், சின்னூர் காலனி மற்றும் பெரியூர் மலை கிராமங்கள் உள்ளன. கொடைக்கானலின் கடைக்கோடியில் உள்ள இந்த கிராமங்களில் அடிப்படை சாலை வசதிகள் கூட கிடையாது. இங்குள்ளவர்கள் 3 ஆறுகளை கடந்து, தேனி பெரியகுளம் காட்டுப் பகுதி வழியாகத்தான் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்கின்றனர். கடந்த 10 நாளாக கொடைக்கானல், அதை சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த கன மழையால் அந்த ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்று வர கிராம மக்கள் சிரமங்களை அனுபவித்தனர்.
ஆக 19, 2024