டில்லி, மும்பையில் நெட்வொர்க்கை பிடிக்க நடவடிக்கை | cocaine | cocaine seized | Chennai Airport |
சிங்கப்பூரில் இருந்து பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. சிங்கப்பூரில் இருந்து வரும் விமான பயணிகளை மப்டியில் கண்காணித்தனர். அப்படி வந்த பயணி ஒருவரின் நடத்தையில் அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அந்த 35 வயது ஆண் பயணி டூரிஸ்ட் விசாவில் கம்போடியா சென்று சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு வந்திருந்தார். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். உடைமைகளை பரிசோதித்தனர். மறைத்து வைத்திருந்த 3.5 கிலோ கொக்கைன் பிடிபட்டது. அதன் சர்வதேச மதிப்பு 35 கோடி. அவரை சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என தெரிய வந்தது. கடத்தி வந்த போதை பொருளை டில்லி மற்றும் மும்பையில் உள்ள கும்பலுக்கு கொடுக்க திட்டமிட்டு உள்ளார். இரண்டு இடங்களிலும் அலர்ட் செய்து அவர்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். Cni