மழை கொட்டியும் கோவையில் நிரம்பாத குளங்கள் | Coimbatore | Rain | Drainage
கோவை மாநகராட்சி பகுதிகளில் சிறிதுநேரம் மழை பெய்தாலே மழைநீர் சூழ்வது தொடர்கதையாக உள்ளது. மழைநீர் வடிகால் வசதி போதியளவில் இல்லாத நிலையில் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக வடிகால்களை மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கென கன்சல்டன்ட் நிறுவனம் மூலமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. மத்திய மண்டலம், காமராஜபுரம் உட்பட ஐந்து முக்கிய இடங்களில் 13 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகளும் நடந்துள்ளன. ஆனால் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படமால் புதர் அண்டி கிடக்கிறது. இப்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்வதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து குளங்களுக்கு நீர் வர துவங்கியுள்ளது. வெள்ளலுார் ராஜவாய்க்கால் மற்றும் சேத்துமா வாய்க்கால் முழுமையாக துார்வாரப்படாததால், உக்கடம் மற்றும் வெள்ளலுார் குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் வந்தடையவில்லை செல்வபுரம் முத்துசாமி காலனி பகுதிக்கு பின்புற பகுதிகளில் வாய்க்கால் இன்னும் துார்வாரப்படவில்லை.