/ தினமலர் டிவி
/ பொது
/ அறை முழுதும் நீர் தேங்கி நோயாளிகள் கடும் அவதி | Coimbatore | Rain | Hevy Rain
அறை முழுதும் நீர் தேங்கி நோயாளிகள் கடும் அவதி | Coimbatore | Rain | Hevy Rain
கோவையில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்றும், இன்றும் மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று மாலை கோவை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் கன மழை பெய்தது. பீளமேடு, ரயில் நிலையம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் கொட்டிய கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மருத்துவமனை வார்டுகளுக்குள் நீர் புகுந்தது. அறை முழுதும் நீர் தேங்கி கீழே இறங்க முடியாமல் நோயாளிகள் தவித்தனர். மருத்துவமனை ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப் 05, 2025