/ தினமலர் டிவி
/ பொது
/ வனப்பகுதி அருகே இருக்கும் குப்பைகிடங்கால் பிரச்னை! Coimbatore | Maruthamalai | Plastic Waste Issue
வனப்பகுதி அருகே இருக்கும் குப்பைகிடங்கால் பிரச்னை! Coimbatore | Maruthamalai | Plastic Waste Issue
கோவை மருதமலை அடிவாரத்தில் சோமையம்பாளையம் ஊராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. அங்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் கொட்டப்பட்டுள்ளன. மருதமலை வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகள் குப்பைமேட்டில் உணவு தேடி அலைகின்றன. சில மாதங்களாக மருதமலை அடிவாரத்தில் யானை நடமாட்டம் அதிகம் உள்ளது. குப்பை கிடங்குக்கு வந்த காட்டுயானை ஒன்று, அங்கிருந்த உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் கழிவுடன் சேர்த்து உண்டது. இதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் போது, நுரையீரல், கல்லீரல் அழற்சி ஏற்பட்டு இறக்க அதிகம் வாய்ப்புள்ளது.
செப் 28, 2024