58 உயிரை காவு வாங்கிய குற்றவாளிக்கு மரியாதையா? Coimbatore serial blast 1998 case mastermind S.A. Bas
பாஜ மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்தை அனுமதித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு 1998-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். அமைதியாக இருந்த கோவையை ரத்த களறியாக்கியதால், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியே தடைபட்டது. பயங்கரவாதிகளால் கோவை குண்டுவெடிப்பு மட்டும் நடத்தப்படாமல் இருந்திருந்தால், பெங்களூரு, புனே போல கோவையும், தகவல் தொழில்நுட்ப மையமாக மாறியிருக்கும். கோவையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த, 50க்கும் அதிகமானோர் உயிரிழக்க காரணமாக இருந்த நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து வாழ்விழக்க காரணமாக இருந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் எஸ்.ஏ. பாஷா.