உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை போக்குவரத்து நெரிசலுக்கு சரியான தீர்வு என்ன? | Multi level car parking | Smart city plan fail

கோவை போக்குவரத்து நெரிசலுக்கு சரியான தீர்வு என்ன? | Multi level car parking | Smart city plan fail

கோவை மாநகரின் போக்குவரத்து நெரிலுக்கு தீர்வு காணவும், பார்க்கிங் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவும், ஆர்.எஸ்.புரத்தில் மல்டிலெவல் பார்க்கிங் கட்டப்பட்டுள்ளது. மக்கள் கருத்தை கேட்காமலும், சரியாக திட்டமிடாமலும் கட்டப்பட்டதால், இந்த மல்டிலெவல் கார் பார்க்கிங் பயன்பாடின்றி கிடக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 44.78 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கார் பார்க்கிங், அரசுக்கு சொந்தமான பொருட்களை போட்டு வைக்கும் குடோனாக மாறியுள்ளது. கார் பார்க்கிங் அமைப்பதற்கான சரியான இடத்தை தேர்வு செய்யாமல், அதிகாரிகள் அவர்களின் இஷ்டத்திற்கு முடிவெடுத்ததே இத்திட்டத்தின் தோல்விக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், அரசு கலைக்கல்லுாரி சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க, ரேஸ்கோர்ஸ் பகுதியில் 9.5 கோடி ரூபாய் செலவில் புதிதாக மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் கருத்து கேட்காமல் மாநகராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை நிறைவேற்றினால், இதுவும் பயனற்று போகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். வாகன நெரிசலுக்கு தீர்வு காண, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்திற்குள் மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைப்பதே சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ