காங்கிரஸ் மாடலில் ஒரு குடும்பத்துக்கே முக்கியத்துவம் Congres | dislike |Ambedkar |Modi |Rajya Sabha
பார்லிமென்ட்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ல் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 4ம் தேதி லோக் சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசினார். இன்று ராஜ்ய சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி கூறி அவர் உரையாற்றினார். ஜனாதிபதி உரை நமக்கு ஊக்கமளிப்பதாகவும், பயனுள்ளதாகவும், நம்மை முன்னேற்றி செல்வதாகவும் அமைந்துள்ளது. இங்கே நாம் அனைவருக்குமான வளர்ச்சி குறித்து பேசுகிறோம். அந்த பொறுப்புணர்வு எல்லோருக்கும் உள்ளது. காங்கிரசுக்கு இதில் என்ன சிரமம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த சிந்தனையுடன் நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். பாரதிய ஜனதாவுக்கு முதலில் தேசம் தான் முக்கியம். காங்கிரசுக்கு முதலில் குடும்பம். அதனால்தான் இந்த இடத்தில் அமர்வதற்கு நாடு எங்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறது. அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது பெரிய தவறு. அது அவர்களுடைய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. அது அவர்களுக்கு பொருந்தாது. காங்கிரஸ் பெரிய கட்சி; ஆனால் ஒரு குடும்பத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. அதனால் அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது அவர்களுக்கு சாத்தியம் இல்லை.