வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காங்கிரசா?அப்படி ஒன்று இருக்குது?
வெத்து வேட்டு பயலுங்க அடிச்ச காசை அந்த பையன் ராகுல் இந்த அடிமைகளுக்கு செலவு பண்ண கொடுக்கிறார்
தமிழகத்தில் மாநாடு சிறப்பு: தலைவர் பேச்சால் காமெடி Congress conference| chairs are empty
வாக்கு திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை காப்போம் என்ற தலைப்பில் நேற்று திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி மாநில மாநாட்டை நடத்தியது. மாநில தலைவர் செல்வபெருந்தகை முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் எம்பிக்கள், எம் எல் ஏக்கள் பங்கேற்றனர். மாலை 5:30 மணிக்கு மாநாடு துவங்கியது. ஆனால், தொண்டர்கள் கூட்டம் கூடவில்லை. இதை முன்கூட்டியே உணர்ந்துதானோ என்னவோ, அரசு பஸ்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் இருந்து பல நூறு பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால், இருட்டத் துவங்கியதும் அழைத்து வரப்பட்டவர்கள் கிளம்பி விட்டனர். மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை பேசும்போது மாநாடு நடந்த இடம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு கட்டத்தில், 90 சதவீதத்திற்கும் அதிகமான சேர்கள் காலியாக கிடந்தன. மேடையில் இருப்பவர்களை விட கீழே இருக்கும் தொண்டர்களின் கூட்டம் குறைவாக இருந்தது. காலி இருக்கைகளை பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் உரை நிகழ்த்த வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.
காங்கிரசா?அப்படி ஒன்று இருக்குது?
வெத்து வேட்டு பயலுங்க அடிச்ச காசை அந்த பையன் ராகுல் இந்த அடிமைகளுக்கு செலவு பண்ண கொடுக்கிறார்