உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனு தந்தும் வேலை நடக்கல; கண்டித்ததால் வந்த அதிகாரிகள்

மனு தந்தும் வேலை நடக்கல; கண்டித்ததால் வந்த அதிகாரிகள்

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், உக்கடை அரியமங்கலம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை சாலை படுமோசாமாக உள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்தும் குண்டும் குழியுமாக இருக்கிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளும் அரைகுறையாக மூடப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இங்கு சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்தும் பயனில்லை. இதை கண்டித்து திருச்சி மாநகராட்சி 35வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ், கட்சியினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். சுரங்கப்பாதை சாலையில் படுத்து உருண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை