பரவும் தகவல் உண்மையா; பழைய குற்றாலம் யார் கையில்? | Courtallam | Courtallam Falls | Forest departmen
அமைச்சர் திடீர் ஆய்வு வனத்துறை வசம் குற்றாலம்? தென்காசி பழைய குற்றாலம் அருவியில் மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாணவன் இறந்தான். தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அருவியல் குளிக்க காலை 6 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பழைய குற்றாலம் செல்லும் ரோட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்க வனத்துறை செக் போஸ்ட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. இந்த சூழலில் 2 நாட்களுக்கு முன் தமிழக வன அமைச்சர் மதிவேந்தன் பழைய குற்றாலம் அருவியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சரின் வருகையை தொடர்ந்து பழைய குற்றாலம் அருவி முழுதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் 29ம் தேதி முதல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வனத்துறை செக் போஸ்ட்டில் முழு சோதனைகளுக்கு பின்பே டூரிஸ்ட்கள் இப்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.