உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் வெளிவந்த உண்மை | Corona period expenses | Funds allocated | TN go

மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் வெளிவந்த உண்மை | Corona period expenses | Funds allocated | TN go

2020ல் பரவிய கொரோனா என்ற கொடிய தொற்று நோய் உலக மக்களையே ஆட்டி படைத்தது. கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிந்தனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் படிப்படியாக பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கவும், கட்டுப்படுத்தவும், மத்திய, மாநில நிதிகள், மாநில பேரிடர் நிவாரண நிதி, பி.எம்.கேர்ஸ் மற்றும் முதல்வர் நிவாரண நிதிகளை தேசிய சுகாதார இயக்கம் நிர்வகித்தது. அதன்படி மத்திய அரசின் 1,435.59 கோடி ரூபாய், மாநில அரசின் 351.89 கோடி ரூபாய் என 1,787.48 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. அதில், 1,522.75 கோடி ரூபாயை செலவிட்ட தமிழக அரசு, 264.73 கோடி ரூபாயை பயன்படுத்தவில்லை என்பது மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. அதேபோல், மத்திய அரசு வழங்கிய 3,757 ஆக்சிஜன் செறிவூட்டிகளில், 147 பயன்படுத்தப்படவில்லை. கொரோனா காலத்தில், என் - 95 மாஸ்க் மொத்தமாக கொள்முதல் செய்திருந்தால், 82.95 லட்சம் ரூபாய் செலவை தவிர்த்திருக்கலாம். குடும்ப நல இயக்குநரகத்தில் வட்டார விரிவாக்க கல்வியாளர், குடும்ப நல உதவியாளர், கல்வியாளர், பெண் சுகாதார பார்வையாளர், மகப்பேறு குழந்தை நல அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 75 சதவீதத்துக்கு மேற்பட்ட பற்றாக்குறை இருக்கிறது. மருத்துவ பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய தனி வாரியம் அமைத்திருந்த போதும், ஆட்சேர்ப்பில் தாமதம் காணப்படுகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் கீழ் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதால், மாற்று மருந்துகளை பிரபலமாக்கும் அரசின் கொள்கை பாதித்துள்ளது. எனவே, குடும்ப நல திட்டங்களை தொடர்ந்து திறம்பட அமல்படுத்த போதுமான பணியாளர்கள் இருப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ