பல முறை சொல்லியும் தூர்வாரவில்லை என விவசாயிகள் வேதனை | Heavy rain | Crops drowned in rainwater | Tan
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது அம்மாபேட்டை சுற்றியுள்ள புத்தூர், உக்கடை, கோவிந்தநல்லூர், விழுதியூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெல் பயிர் -நடவு செய்துள்ளனர். தஞ்சை - நாகை சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாராததால் மழை நீர் அடைப்பு ஏற்பட்டு மொத்த மழை நீரும் விளை நிலங்களுக்குள் புகுந்து குளம்போல் காட்சி அளிக்கின்றன. வயலுக்குள் இருக்கும் மழைநீர் வடிய வழி இல்லாததால் நடவு செய்த இளம் பயிர் மற்றும் 30 நாள் பயிர்கள் நீரில் மூழ்கி அழகும் நிலை ஏற்பட்டுள்ளது. வாய்க்கால்களை தூர்வார பலமுறை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதே இப்போது இந்த நிலைக்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் மேலும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.