உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சதி வேலையா என டில்லி போலீஸ் விசாரணை Delhi | CRPF School | Explosion | Minor incident | Delhi Police

சதி வேலையா என டில்லி போலீஸ் விசாரணை Delhi | CRPF School | Explosion | Minor incident | Delhi Police

பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்! CRPF பள்ளி அருகே பதட்டம் டில்லி வடமேற்கு மாவட்டம் ரோகினி பகுதியில் பிரசாந்த் விஹார் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நடத்தும் CRPF பள்ளி உள்ளது. இதன் அருகிலேயே இன்று காலை 7.49 மணி அளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சிஆர்பிஎப் பள்ளியின் சுவர் சேதமடைந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடி சேதம் அடைந்தது. அருகில் உள்ள கடைகளின் நேம் போர்டுகளும் சேதமடைந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு யாரும் வராததால் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை