உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மும்பை ஏர்போர்ட் கடைகளில் உள்ள பெண் உட்பட 3 பேர் கைது | Customs | Gold Smuggling | Mumbai Airport

மும்பை ஏர்போர்ட் கடைகளில் உள்ள பெண் உட்பட 3 பேர் கைது | Customs | Gold Smuggling | Mumbai Airport

மும்பை ஏர்போர்ட்டில் தங்க கடத்தல் கும்பலுடன் ஏர்போர்ட் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் தங்கத்தை இவர்கள் வெளியே கொண்டு செல்கின்றனர் என ரகசிய தகவல் வந்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் வியாழன் மற்றும் வெள்ளியன்று மும்பை ஏர்போர்ட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை முடிவில் ஏர்போர்ட்டில் உள்ள ஒரு கடை ஊழியர் பிரதீப் பவார் கைது செய்யப்பட்டார். பிரதீப்பிடம் இருந்து அதிகாரிகள் தங்க தூள் இருந்த பாக்கெட்டுகளை மீட்டனர். அவர் அவற்றை தனது பேன்ட்டில் மறைத்து வைத்திருந்தார். விசாரணையில் பயணிகளிடமிருந்து அந்த சரக்கைப் பெற்றதாக அவர் கூறினார். தொடர் விசாரணையில் பிரதீப் சரக்கை கை மாற்ற இருந்த முகமது இம்ரான் மற்றும் அன்ஷு குப்தா என்ற பெண் ஊழியரையும் அதிகாரிகள் கைது செய்தனர். 3 பேரும் ஏர்போர்ட்டில் உள்ள ஓட்டல் மற்றும் வெவ்வேறு கடைகளில் பணிபுரிபவர்கள். இவர்களிடம் இருந்து 3.67 கோடி மதிப்புள்ள தங்கத் தூளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

மார் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை