ஆளையே மூழ்கடிக்கும் வெள்ளம்: உணவின்றி மாடியில் தவித்த குடும்பம் | Cyclone Fengal | Flood | Family st
புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களில் சுமார் 50 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் புதுச்சேரி நகர பகுதி மட்டுமல்லாமல் கிராம பகுதிகளும் வெள்ள காடாக காட்சியளிக்கின்றன. தண்ணீரில் சிக்கி தவித்து வரும் மக்களை தீயணைப்பு வீரர்களும், பேரிடர் மீட்பு குழுவினரும் படகு மூலம் மீட்டு வருகின்றனர். கொம்பாக்கம் நெசவாளர் நகர் பகுதியில் ஆள் உயர வெள்ளம் சூழ்ந்த நிலையில் தவசுமணி, செல்வராணி தம்பதி வீட்டுக்குள் சிக்கினர். இவர்களின் வீடு காலி மனைகளுக்கு இடையே தனியாக அமைந்துள்ளது. இதனால் மின்சாரம் துண்டான நிலையில், மொபைல் டவரும் கிடைக்காததால் உதவிக்கு யாரையும் கூப்பிட முடியாமல் தவித்தனர். பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் 3 நாட்களாக உணவு கூட கிடைக்காமல் வீட்டைவிட்டும் வெளியே வர முடியாமல் மொட்டை மாடியில் ஆடு மாடுகளுடன் பரிதவித்தனர். தூரத்தில் வந்தவரை சைகை காட்டி அழைத்ததன் மூலம் விஷயம் தெரிந்து, தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் அவர்களை மீட்டனர்.