உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழை நிவாரணம் கிடைக்காத பெண்கள் வாக்குவாதம் | Cyclone Fengal | Flood relief | CM Stalin | Tindivanam

மழை நிவாரணம் கிடைக்காத பெண்கள் வாக்குவாதம் | Cyclone Fengal | Flood relief | CM Stalin | Tindivanam

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் ஒரு சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு வழங்குமாறு கட்சி நிர்வாகிகளிடம் கூறி கிளம்பி சென்றார். அவருடன் வந்திருந்த அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, சிவசங்கர் ஆகியோரும் கிளம்பி சென்றனர். அடுத்த நிமிடமே அங்கிருந்த மக்கள் நிவாரண பொருட்களை வாங்க போட்டி போட்டு முண்டியடித்தனர். திமுக நிர்வாகிகள் நிவாரண பொருட்களை தூக்கி வீச, பொதுமக்கள் அதை கேட்ச் பிடித்து எடுத்து சென்றனர். ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசலில் பொருட்களை வழங்க முடியாமல் திணறிய திமுக நிர்வாகிகள் விநியோகத்தை பாதியிலேயே நிறுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அங்கு அடுக்கி வைத்திருந்த நிவாரண பொருட்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர். ஒரு சிலர் மற்றவர்கள் கையில் இருந்து ஆவேசமாக பிடுங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை