உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 12 வயது சிறுவனை பறிகொடுத்த குடும்பம் கதறல் | Cyclone Fengal | Heavy rain | Electric shock

12 வயது சிறுவனை பறிகொடுத்த குடும்பம் கதறல் | Cyclone Fengal | Heavy rain | Electric shock

கனமழையில் மின்சாரத்தின் கோரமுகம் அரக்கோணத்தில் அடுத்த மரணம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் விண்டர்பேட்டையை சேர்ந்தவர் சபீரா. இவரது 12 வயது மகன் ரிஸ்வான் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இன்று மதியம் வீட்டில் லைட் போடுவதற்காக ஸ்விட்சை ஆன் செய்துள்ளார். அப்போது கனமழையால் வீட்டின் சுவர் ஊறி மின் கசிவு ஏற்பட்டு ரிஸ்வான் உடலில் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனை, வீட்டில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ரிஸ்வான் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தார். அதை கேட்டதும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் கதறி அழுதனர்.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை