மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று! தீவிர புயலாகவே கடக்கிறது |CYCLONIC STORM| Montha |Andhra
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு மோந்தா புயலாக வலுவடைந்தது. ஆந்திரா, விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கில் நிலை கொண்டிருந்த புயல் இன்று காலை தீவிர புயலாக வலுவடைந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கையின் படி ஆந்திரா மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை புயல் கரையை கடக்க துவங்கியது. இரவு 9.30 மணி நிலவரப்படி மணிக்கு 15 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து செல்கிறது . அடுத்த 2 மணி நேரத்தில் புயல் முழுதுமாக கரையை கடக்கலாம். தீவிர புயலாகவே கரையை கடக்கும். மணிக்கு 90 - 100 கிமீ, அதிகபட்சமாக 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்படும் என கணித்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காக்கி நாடா, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் உட்பட 14 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.