/ தினமலர் டிவி
/ பொது
/ நஷ்ட ஈடு கேட்டு புதுச்சேரி மீனவர்கள் ஸ்டிரைக் | Damage to powerboats | Fishers strike | Puducherry
நஷ்ட ஈடு கேட்டு புதுச்சேரி மீனவர்கள் ஸ்டிரைக் | Damage to powerboats | Fishers strike | Puducherry
மும்பை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல், புதுச்சேரி கடலில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிப்ரவரி 27ல் மணல் அள்ளும் பணியின்போது முகத்துவாரத்தில் தரை தட்டியதால் கப்பலின் சில உதிரி பாகங்கள் உடைந்து கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றை கப்பல் நிறுவன ஊழியர்கள் அகற்றாமல் சென்றுள்ளனர். விஷயம் தெரியாமல் புதுச்சேரி மீனவர்கள் அந்த வழியாக விசைப்படகில் வழக்கம்போல் மீன் பிடிக்கச் சென்றனர். முகத்துவார பகுதியை கடக்கும்போது அங்கு சிக்கி இருக்கும் கப்பலின் உதிரி பாகங்களில் மோதி படகுகள் சேதம் அடைந்தன.
மார் 11, 2025