உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதிகளை வளர்ப்பதே நீங்கள்தான்: பாக். பிரதமருக்கு சூடு | Danish Kaneria |former Cricket Player

பயங்கரவாதிகளை வளர்ப்பதே நீங்கள்தான்: பாக். பிரதமருக்கு சூடு | Danish Kaneria |former Cricket Player

Danish Kaneria |former Cricket Player | Pakistan PM ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். பஹல்காம் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கண்டனம் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லையென்றால் பிரதமர் ஏன் இன்னும் அதை கண்டிக்காமல் இருக்கிறார். எதற்கு பாகிஸ்தான் படைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கின்றன. ஏன் என்றால் உண்மை உங்களுக்கு தெரியும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்ப்பதே நீங்கள்தான். இது உங்களுக்கு அவமானம் என டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். டேனிஷ் கனேரியாவின் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை