வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காலாவதி கடன் வாரா கடன் சங்கம் இதை சரி பண்ணுமா அதிகாரம் பதிவாளர் முதல்வரின்பார்வைக்கு அனுக்கவேண்டும் பத்திரம் பத்திரமாக இருக்கயில்லை தலையெழுத்து மாற்ற கையெழுத்து வேண்டும் முதல்வர் நினைத்தால் கடனாளி க்கு விடியல்
வீட்டுவசதி சங்கங்கள் எடுக்கப்போகும் முடிவு என்ன? | Debt | Housing cooperative
மக்களுக்கு, நியாயமான விலையில் வீட்டு மனைகள் கிடைக்கவும், குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கவும் நகர்ப்புற வீட்டுவசதி சங்கங்கள் துவக்கப்பட்டன. தமிழகத்தில் தற்போது 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. இவற்றை ஒருங்கிணைக்க கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இணையம் உள்ளது. வீட்டுவசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன் தொகையை வசூலிக்க, அபராத வட்டி தள்ளுபடி திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலுவைத்தொகை செலுத்திய 5,300 பேர், இன்னும் பத்திரம் திரும்ப கிடைக்காமல் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தற்போது நிலுவையில் உள்ள, 1,000 கோடி ரூபாய் கடனை வசூலிக்கும் பணியை முடுக்கிவிட, சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்குவது குறித்து, அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால், அபராத வட்டியுடன், கடன் நிலுவையை வசூலிக்க வேண்டிய நெருக்கடி, ஊழியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு, இன்னும் பத்திரம் கிடைக்காத நிலையில், நிலுவை கடனை, அபராத வட்டியுடன் திரும்ப செலுத்த யாரும் தயாராக இல்லை. இதனால், சங்கங்கள் கடனை வசூலிக்க முடியாமல், புதிய கடன்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு வசதி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் இது குறித்து அக்கறை எடுப்பதே இல்லை.
காலாவதி கடன் வாரா கடன் சங்கம் இதை சரி பண்ணுமா அதிகாரம் பதிவாளர் முதல்வரின்பார்வைக்கு அனுக்கவேண்டும் பத்திரம் பத்திரமாக இருக்கயில்லை தலையெழுத்து மாற்ற கையெழுத்து வேண்டும் முதல்வர் நினைத்தால் கடனாளி க்கு விடியல்