/ தினமலர் டிவி
/ பொது
/ கைதிகளை புதிய இடத்துக்கு மாற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!| Delhi | Tihar Jail | Relocation | Budget
கைதிகளை புதிய இடத்துக்கு மாற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!| Delhi | Tihar Jail | Relocation | Budget
டில்லி திஹார் சிறைச்சாலை 1958ல் நிறுவப்பட்டது. 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள இது, நாட்டின் பெரிய சிறைச்சாலைகளில் ஒன்று. திஹார் சிறையில் 10 ஆயிரத்து 25 கைதிகளை மட்டும்தான் அடைக்க முடியும். ஆனால் தற்போது அங்கு 19 ஆயிரம் கைதிகள் உள்ளனர். கைதிகளின் நெரிசல் பாதுகாப்பு பிரச்னைகளையும் கொண்டு வருகிறது. இதனால் கடந்த ஆட்சியின் போதே புதிய இடத்துக்கு சிறைச் சாலையை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. புற நகர் பகுதிகளில் இடம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தற்போது நரேலா பகுதியில் புதிய சிறைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
மார் 26, 2025