சென்னைக்கு வந்த டில்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி!|Delhi Blast|NIA|Umar Nabi Chennai Visit
டில்லி செங்கோட்டை அருகே சென்ற 10ம் தேதி பயங்கரவாதி உமர் நபி, காரில் வெடி பொருட்களை எடுத்து சென்று வெடிக்க வைத்தார். உமர் மற்றும் அப்பாவிகள் 14 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் கைதான 17 பேரையும், கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாருதீனையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். பயங்கரவாதி உமர் நபி, அக்டோபரில் சென்னையில் உள்ள பண்ணை வீடுகளில் கூட்டாளிகளுடன் தங்கி சென்றதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உமர் நபியுடன் இங்கு தொடர்பில் இருந்தவர்களை என்ஐஏ துப்பு துலக்குகிறது. இவர்களுக்கும், கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இலங்கையில் 2019ல், ஈஸ்டர் நாளில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய சஹ்ரான் ஹாசிம், சென்னை மண்ணடி மற்றும் கோவைக்கு வந்து சென்றார். உமர் நபியும் தன் கூட்டாளிகளுடன் தமிழகம் வந்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது என என்ஐஏ அதிகாரிகள் கூறினர்.