டில்லி சம்பவத்தில் இதுவரை வெளிவராத திடுக்கிடும் உண்மை | delhi car blast | ind vs pak | shaheen saeed
டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டுள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடிய தாக்குதலை நடத்தியவர்களும் இதற்காக திட்டமிட்டவர்களும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் டாக்டராக வேலை பார்த்தவ ஒயிட் காலர் பயங்கரவாதிகள். கார் குண்டு வெடிப்பை முன்னின்று நடத்திய பயங்கரவாதி டாக்டர் உமர் நபியும் உடல் சிதறி இறந்து விட்டார். அவருக்கு பின்னால் இருந்து திட்டமிட்ட டாக்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஷாகின் ஷாகீத் என்ற பெண் டாக்டர். இவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். இவரது பின்னணி பற்றி இப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி உள்ளன. அது என்ன என்பதை பார்க்கலாம். #DelhiRedFortCarBlast #MasoodAzhar #ANFO #INDvsPAK #DelhiBlast #Terrorism #SecurityConcerns #LiveUpdates #NationalSecurity #CurrentEvents #BreakingNews #PoliticalTension #PublicSafety