உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் 5ம்தேதி தேர்தல்: அனல் பறந்த இறுதி கட்ட பிரசாரம் Delhi election 2025| BJP| Congress| AAP|

டில்லியில் 5ம்தேதி தேர்தல்: அனல் பறந்த இறுதி கட்ட பிரசாரம் Delhi election 2025| BJP| Congress| AAP|

டில்லியில் வரும் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சந்திரபாபு நாயுடு, தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக டில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஆதிஷி, மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சியில் டில்லி சீரழிந்துள்ளதாகவும், டில்லியில் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுள்ளதாகவும், பாஜ குற்றம்சாட்டியது.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை